4 years ago
Brest, synus, Fear
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது.
நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.
Published by
mammypages
Rate the article
0 VoteHAPPY
INDIFFERENT
AMMUSED
EXICTED
ANGRY
SAD
Comments (0)
mammypages.com ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும்