READ IN :

Hi, Guest

READ IN :

Hi, Guest

 Print  Report

சருமத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு குளிப்பது எப்படி?

  

4 years ago

 Bath, clean, refresh

149
Views
facebook twitter instagram whatsapp whatsapp

ADVERTISEMENT

சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

சிலர் சற்று அதிகமாக வியர்வை வந்ததும் குளிக்க சென்று விடுவார்கள். இதுபோன்று அடிக்கடி குளிப்பதால் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு காணப்படும். அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளிப்பது சிறந்தது.

சருமத்துக்கு ஏற்ற சோப்..

சோப் தேர்வில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப சோப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் சோப் சருமத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அதை உடனே தவிர்ப்பது நல்லது. முகத்துக்கு பயன்படுத்தும் சோப்பை தனியாக வைத்திருப்பது சிறந்தது. முடிந்தவரை முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்கு பதில் ராசாயம் அதிகம் சேர்க்காத பேஸ்வாஷ்களை  (Face Wash) பயன்படுத்துவது நல்லது. அதேபோல் அதிக நுரை உள்ள சோப்களை பயன்படுத்தாமல் சருமத்துக்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தலாம்.

துண்டு (Towel)விஷயத்தில் கவனம்..

சோப் பயன்படுத்துவதுபோல் துண்டு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் துண்டை தலைக்கும் பயன்படுத்துவர். எப்போதும் உடலுக்கும் தலைக்கும் தனித்தனியாக துண்டு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை துண்டை பயன்படுத்தியதும் அதை தரமான சோப்பை கொண்டு துவைத்து வெயிலில் நன்கு உலர்த்தி காய வைக்க வேண்டும். துண்டில் முழுமையாக ஈரம் காய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.


Published by
mammypages


1LOVEFAVOURITE

Rate the article

0 Vote
0%

HAPPY

0%

INDIFFERENT

0%

AMMUSED

0%

EXICTED

0%

ANGRY

0%

SAD

Comments (0)


மருத்துவ நிபந்தனைகள்:

mammypages.com ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும்

RELATED ARTICLES